துப்பாக்கி தோட்ட
துளைத்த நிலையிலும்
தான் சொல்ல வேண்டிய
அனைத்தையும்
தெளிவாக சொல்லிவிட்டு
உங்கள் கதாபாத்திரம்
சாகும் போது,
கூடவே சாகிறது
உங்கள் சினிமா !
சொல்ல நினைத்த நியாத்தை
நாலுவரி எழுதி
மேலே நகர விட்டு
அதை படிக்கவும்
செய்தீர்களே,
அப்போதுதான்
மீண்டும் உறுதி செய்து கொண்டேன்
அந்த இரண்டரை மணிநேரப்
படத்தில், நீங்கள்
எதையுமே சொல்லவில்லை என்பதை!
நீச்சல் குளத்தில்
நீச்சல் உடையில் நீராடி
அதே உடையில்
நடுச்சாலையில் நடனமாடி
பூங்காக்களில்
படுத்துருண்ட போதெல்லாம்
வராத வெட்கம்
எங்கிருந்தோ வந்து விடுகிறது
உங்கள் கதாநாயகி
மணமகளாக மாறும்போது!
தான் காதலிக்க ஒரு பெண்
தன்னை காதலிக்க ஒரு பெண்
பாசமாக தோளில் சுமக்க
ஒரு தங்கை
எனும் வகையில்
குறைந்தபட்சம் மூன்று
பெண்களாவது
தேவைபடுகிறார்கள்
உங்களின் ஒரு
கதாநாயகனுக்கு!
0 comments:
Post a Comment