முதலில் சென்னையைப்பிடிப்போம்,பிறகு கோட்டையைப்பிடிப்போம்- ராமதாஸ் # ஊருக்குள்ள நாய் பிடிக்குற வண்டி வரட்டும்,உன்னைபிடிச்சு குடுக்கிறோம்!
மதிமுகவுக்கு பெருகுகிறது இளைஞர் ஆதரவு: வைகோ# அதான் அதேதான், நானும் ஹெல்த் மினிஸ்டர் ஆகணும்னு கனவு கண்டேன், இங்க வந்தேன் குணமாயிடுச்சு!
உள்ளாட்சிதேர்தலில் அதிமுக காணாமல்போகும்-நாஞ்சில் சம்பத்#ஹலோ யாரு தன்ராஜா?ஒரு 300சிமெண்ட் பேக்ஸ் ரெடிபண்ணிடுங்க, நான் கலெக்டர்கிட்டபேசுறேன்
ஜெ.வார்த்தைகள் அவரையே திருப்பித் தாக்குகின்றன- கருணாநிதி # உலகம் உருண்டைன்னு அமெரிக்காகாரன் கண்டுபிடிக்கலை, ஐ ஆம் தான் கண்டுபிடிச்சேன்!
தேர்தல் விதிமுறை மீறல்: வைகோ மீது 2 வழக்கு # நாம வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதெல்லாம் தேவையா?
சத்தியமூர்த்தி பவனை அடித்து நொறுக்கி காங்கிரஸார் ரகளை # சமரசம் பண்ண காந்தியே வந்தாலும் அவரையும் மண்டையை உடைச்சு வேட்டிய உருவிடுவாங்க
என்னை முதல்வராக்கிப் பாருங்கள்- விஜயகாந்த் அதிரடி பிரசாரம் # உன்னை பார்க்கவே சகிக்கல, இதுல முதல்வாரா வேற ஆக்கி பார்க்கணுமா?
சத்தியமூர்த்திபவனை அடித்து நொறுக்கி காங்கிரஸார் ரகளை# சுதந்திரம் வாங்கியதிலிருந்து கொள்கையை மாற்றிக்கொள்ளாத தமிழககாங்கிரஸ் கட்சி வாழ்க!
அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் # அண்ணனுக்கு ஒரு ஊஊஊஊத்தாப்பம்ம்ம்ம்ம் !
தாம்பரம்-மறைமலைநகரில் டாக்டர் ராமதாஸ் இன்று பிரசாரம் # அடிச்சும் பார்த்தாச்சு, உதைச்சும் பார்த்தாச்சு, இந்தாளு திருந்துறமாதிரி தெரியலயே!
தெலுங்கானா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: பிரதமர் மன்மோகன்சிங் உறுதி# ஏய் டக்லஸ்! 10ரூபாய்க்கு சோன்பப்படி கொடு,தின்னே புடனும்!
மரியாதையே தெரியாத, இல்லாத கட்சி அதிமுக- பிரேமலதா தாக்கு# மரியாதைன்னு ஒரு படம் எடுத்துட்ட மரியாதை தெரிஞ்ச கட்சியாகிவிடலாமா?
விருதுநகர் மாவட்டத்தில் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் # இன்று விருதுநகர் மாவட்ட டாஸ்மாக்கில் நல்ல வியாபாரம்
ஓட்டுப் போடாவிட்டால் சாமி கண்ணை குத்தும்-விஜயகாந்த் # நீயெல்லாம் அரசியலுக்கு வந்ததைபார்த்து சாமி உன்னை இன்னும் பொலி போடாம இருக்கே!
அரசியல் பழமொழிகள்
"காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் !
"கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்." - விஜயகாந்த்
"கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை" - பாட்டாளி மக்கள் கட்சி !
"ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி" - தமிழக காங்கிரஸ் !
"இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாளைக்கு" - அதிமுக !
"அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை" - கொங்கு நாடு முன்னேற்ற கழகம்
"அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை" - தமிழக பாரதிய ஜனதா !
"அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது" - விடுதலை சிறுத்தைகள் !
"அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது." - மதிமுக !
"அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல" - இந்திய கம்யூனிஸ்ட்
Tweets by Kaniyan
0 comments:
Post a Comment