" எத்தனை முறை பெய்தாலும்
அடுத்த முறை எப்போது
ஏக்கத்தில் மனது ! "
" 'மழை' எழுதி பார்த்ததில்
நனைந்து போனது இதயம். "
" இதோ அவள் வருகிறாள்...
காத்திருப்பது மண் மட்டுமல்ல
என் மனமும் தான்
அவள் வந்துவிட்டாள்...
ஈரமாகி போனது நிலம் மட்டுமல்ல
என் நெஞ்சமும் தான்
இதோ அவள் சென்றுவிட்டாள்...
என்று வருவாள் என ஏங்கி
காத்து கிடப்பது ஊர் மட்டுமல்ல
இந்த ஊமையனும் தான். "
0 comments:
Post a Comment